மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வுச் சங்கம்-168 மாணவ மாணவிகளுக்கு 03 நாள் பயிற்சி நிறைவு
மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் கடந்த பல வருடங்களாக பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றது.
இதன் அடிப்படையில் கடந்த 8ம் 9ம் 10ம் திகதிகளில் மன்னார் கல்வி திணைக்களத்தின் உதவியுடன் மன்னார் மாவட்டத்திலுள்ள மடு,மன்னார் வலய பாடசாலைகளிலிருந்து சாதாரண உயர் தரத்திற்குதிற்கு தோற்ற உள்ள 168 மாணவ மாணவிகளுக்கு 15 சிறந்த ஆசிரியர்களைக் கொண்ட 03 நாள் பயிற்சியை வழங்கியது.
- 01ம் நாள் நிகழ்வு அல் அஸ்கர் பாடசாலையில் மதுமச தலைவர் வண.பிதா.அ.சேவியர் குரூஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- 02ம் நாள் நிகழ்வு புனித சவேரியார் பெண்கள் கல்லூரியிலும்
- 03ம் நாள் நிகழ்வு புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் காலை 8.30 – பி.ப.4.00 மணி வரை இடம் பெற்றது.
இதற்கு தேவையான முழு நிதியையும் மாணவ மாணவிகளின் நலன்கருதி (மதுமச)-மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் ஏற்றுக்கொண்டது.

மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வுச் சங்கம்-168 மாணவ மாணவிகளுக்கு 03 நாள் பயிற்சி நிறைவு
Reviewed by Author
on
May 16, 2018
Rating:

No comments:
Post a Comment