300 நபர்களை படுகொலை செய்த கொடூரன்:
கொலம்பியாவில் Popeye என அறியப்பட்டவர் Jhon Jairo Velasquez. இவர் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவரான பாப்லோ எஸ்கோபரின் முக்கிய பாதுகாவலராக செயல்பட்டவர்.
முன்னாள் கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு,
22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவித்து 4 ஆண்டுகளுக்கு முன்னர் Velasquez பிணையில் வெளி வந்தார்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் Velasquez இதுவரை 300 பேரை படுகொலை செய்துள்ளதாக நீதிபதி முன்பு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.
குறித்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கொள்ளை, மிரட்டி பணம் பறித்த உள்ளிட்ட வழக்குகளின் கீழ் வெள்ளியன்று பொலிசார் Velasquez-ஐ கைது செய்துள்ளனர்.
ஆனால் இதுவரை விசாரணை குறித்த தகவல்கள் எதையும் பொலிசார் வெளியிடவில்லை.
56 வயதான Velasquez போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவாரக கோலோச்சிய பாப்லோ எஸ்கோபரின் முக்கிய பாதுகாவலராக செயல்பட்டவர்.
கடந்த 1993 ஆம் ஆண்டு கொலம்பிய பொலிசாரால் பாப்லோ எஸ்கோபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எஸ்கோபருக்காக Velasquez 3000 படுகொலைகளை மேற்கொண்டுள்ளார். அதில் 300 நபர்களை Velasquez தமது கைகளால் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
300 நபர்களை படுகொலை செய்த கொடூரன்:
Reviewed by Author
on
May 27, 2018
Rating:
No comments:
Post a Comment