மன்னாரில் தற்கொலையினை தடுக்கும் விசேட நிகழ்ச்சித் திட்டம்
குறித்த குழுவினர் 25-05-2018 மாலை மன்னார் பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
கரையோர பகுதிகளூடாக 73 நாட்களும், 1, 460 கிலோ மீட்டர் சுற்றுப்பயணத்தை இந்த குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், மன்னார் நகருக்கு வருகை தந்து தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் நகரத்தில் அமைந்துள்ள குடும்ப புனர்வாழ்வு நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றுள்ளதுடன், மாவட்டத்தில் உளவியல் ரீதியான சேவைகளை மேற்கொண்டு வரும் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பயிற்சியில் மன்னார் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக கடமையாற்றும் பல்வேறு தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
உங்களது பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாத போது நீங்கள் கவலையாக தனிமையாக மன அழுத்ததிற்கு உட்படுகின்றீர்களா...?
அதிலிருந்து விடுபட அழையுங்கள்
அழைப்புக்கள் இலவசம்-
1333காலை- 9மணியில் இருந்து மாலை 05 மணிவரை
0717639898 சாந்திமார்க்கம்- 24 மணிநேரமும்
011 2696666 சுமித்திரயோ

மன்னாரில் தற்கொலையினை தடுக்கும் விசேட நிகழ்ச்சித் திட்டம்
Reviewed by Author
on
May 26, 2018
Rating:

No comments:
Post a Comment