அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரம் பாலாவிக்குள் 2முதலைகள் பக்தர்கள் கவலையில் கரையில்…..

திருக்கேதீஸ்வரம் திருத்தலமானது வடக்குமாகாணத்திலுள்ள மன்னார் மாவட்டத்தில் மாதோட்ட என்னும் இடத்தில் சூழமைவினைக் கொண்டு காணப்படுகின்றது. இத்தலமானது பாடல்பெற்ற திருத்தலமாகும்.

மன்னார் மாவட்டத்தின் பழமையானதும் தமிழ் மக்களின் அடையாளங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் திருத்தலமானது இலங்கையின் எல்லாப்பாகத்தில் இருந்து மட்டுமல்ல உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் ஒரு புனித தலமாகும்.
இங்கு உள்ள பாலாவித்தீத்தக்கரை இங்கு வருகைதரும் பக்தகோடிகளின் நேர்த்திக்கடன் தீர்க்கவும் பாவப்பரிகாரம் பெறவும் மூலகாரணமாக அமைகின்றது.

வருகை தரும் பக்தர்கள் தமது வருகையின் முழுமையாக பூர்த்தி செய்யும் பொருட்டு பாலாவியில் பக்தியுடன் நீராடியும் பாலாவி தீர்த்தம் சுமர்ந்து சிவபெருமான் வலம்வந்து சிவலிங்கம் தரிசனம் செய்வது வழக்கம்.

 திருக்கேதீஸ்வரம் ஆலயப்பணிகள் துரிதகதியில் நடைபெற்றுவருகின்றபோதும் தற்போது பாலாவிக்கரையில் உள்ள விளம்பரப்பலகை வசனம் "முதலை கவனம்" என்பது பக்தர்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளதுடன் பாலாவிக்கரைக்கு பக்தர்கள் பலர் வரவே பயப்படுகின்றார்கள்.

இருப்பினும் சில பக்தர்கள் சிவபெருமானின் மீது நம்பிக்கையோடு தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றார்கள் இதுவரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்றாலும் இப்படியே விடுவது நல்ல செயல் அல்ல…
  • ஒரு சிலரின் தவறான செயற்பாடுகள் அதாவது பாலாவியில் சோப்பு-ஷம்பு போட்டுக்குளித்தல்
  • பொழுதுபோக்க நீச்சலடிக்கவும் வருகை தருவதால் அதை தடுப்பதற்கு ஒரு காவலாளி கடமையில் உள்ளார்.

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பரிபாலன சபையினரிடம் பக்தர்களின் வேண்டுதல் என்னவென்றால் பாலவிக்கரையில் உள்ள இரண்டு முதலைகளையும் வனவிலங்கு அதிகாரிகளின் உதவியுடன் அப்புறப்படுத்தி பக்தர்களின் இயல்பான கோவில் கடமைகளை பயமின்றி செய்வதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  • முதல் இருந்ததை விட தற்போது புற்களை அகற்றி கீழ்பகுதியில் மணல் பரப்பி  கற்தூண்கள் கட்டி நன்றாகவுள்ளது அதுபோல இதையும் செய்யலாமே
  • பாதுகாப்பிற்காக  சுற்றி முழுதும் மதில்கட்டலாம் வழிமுறைகளைப்பார்த்து 
  • அல்லது கம்பிவேலி போடலாம் அல்லவா
  •  அருகில் இருப்பதால் அருமையும் அதன் சிறப்பும் நமக்கு தெரியவில்லை

பாலாவிக்குள் இரண்டு முதலைகள் இருப்பதாகவும் அது மாலைவேளையில் கரையில் வந்து கிடப்பதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தார்கள் சில பக்தர்கள் விளம்பரப்பலகையினை பார்க்காமல் பாலவிக்குள் இறங்குவதும் முதலை இருக்கு கவனம் என்று சொல்ல பதறியடித்துக்கொண்டு ஓடுவதும் காணக்கூடியதாகவுள்ளது.

பக்தர்களின் நலன் கருதி உடனடித்தீர்வு காணவேண்டும்……
-மன்னார்விழி-







திருக்கேதீஸ்வரம் பாலாவிக்குள் 2முதலைகள் பக்தர்கள் கவலையில் கரையில்….. Reviewed by Author on May 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.