கிழக்கு பல்கலை - முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இம்முறை இரு தினங்கள்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
17ஆம் திகதி இரத்ததான நிகழ்வும், 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 18 இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு நாள்.
இந்த இனப் படுகொலையினை நினைவுகூரும் முகமாக தமிழர் தாயகத்தில் அனைத்து இடங்களிலும் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இத்துடன் நின்றுவிடாது எதிர்வருகின்ற காலங்களிலும் எமது அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
இதற்காக எமது அரசியற் தலைமைகள் சிறந்த வழிவகைகளை அமைத்து எதிர்கால சமுதாயத்திற்கு இவ்வாறானதொரு அழிவு நடைபெற்றிருக்கின்றது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான துயர் நடைபெறாமல் இருப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இந்த நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு எவ்வித தடையும் இன்றி தற்போதைய காலத்தில் செய்வது போன்று எதிர்காலத்திலும் செய்ய வேண்டும்.
முள்ளிவாய்க்கால் படுகொலை அனுஷ்டிப்பு நிகழ்வினை கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீட மாணவர் ஒன்றியம் கடந்த வருடம் ஒரு குறுகிய எல்லைக்குள் நடத்தினோம்.
ஆனால் இந்த வருடம் இந்நிகழ்வினை சற்று பரந்தளவு ரீதியில் இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். முதல் நாள் 17ம் திகதி இரத்தான நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம்.
அத்துடன் 18ம் திகதி சிறப்பான ஒரு அனுஷ்டித்தலையும், நினைவேந்தலையும் எமது கலை கலாச்சார பீடத்திற்கு முன்னாள் நடத்தத் தீர்மானித்துள்ளதுடன், உயிரிழந்த எமது உறவுகளுக்காக ஒரு ஆராதணை நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளோம்.
இதற்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
இது எமது தமிழினத்தின் அழிப்புக்குரிய அடையாளமாகக் கொள்ளப்படுகின்ற நாள். இந்த நாளை நாங்கள் அனுஷ்டிப்பதற்கு எவ்வித தடையும் இல்லாமல் வழிவகைகளைச் செய்து தருவதோடு, எதிர்காலத்திலும் இவ்வாறான எமது இன அழிப்பு நினைவுகூரல்களை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளையும் அனைத்து தரப்பினரும் செய்து தரவேண்டும் என நாங்கள் இந்த விடத்தில் கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு பல்கலை - முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இம்முறை இரு தினங்கள்!
Reviewed by Author
on
May 15, 2018
Rating:
Reviewed by Author
on
May 15, 2018
Rating:


No comments:
Post a Comment