ஒய்யார நினைவுகளில் ஒப்பாரி இடுகிறார்கள்.
ஒய்யார நினைவுகளில்
ஒப்பாரி இடுகிறார்கள்.
பாவம் மன்னித்து விடுங்கள்..........
அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு
அனாதையாய் அலைந்த எமக்கு
அகமும் புறமுமாய் முகவரியாய்
அடையாளமிட்டவன்.
காரிருளை கந்தக மேனியால்
கருக்குளம் நீக்கி .......
கதிரொளியாய் செருக்களமிட்டவன்
கரிகால தவப்புதல்வன்........
நீர்க்குமிழிகள் எல்லாம்
நின் நிகராக முடியுமா ?
நிலையிழப்பை பேறுயர்த்த
நிலை கெட்டு அலைகிறார்கள்.......
ஒப்பீட்டுக்கு இங்கு யாருழர்
ஓங்கும் ஆசையை தாங்குமா தமிழர் மனம்
ஒளிர்விடவாடலற்றோர் எல்லாம்
ஓங்கியுரைக்கிறார்கள் ஓனாய்களாய்.
புலியிசை உரைத்தோ .......
புலிக்குரல் இட்டோ....
உணர்ச்சிவச உசுப்பேத்தியோ....
தலை நிலை எழலாமோ ?
வலி சுமக்காத கூட்டம்
வழி சுமக்க வலிகிறது
வார்தை யாலத்தால் மலினம் கொள்ள
வாக்கு வங்கி ஆதாயச்சூதாடி அல்ல அவன்
வங்குரோத்து வார்தை கண்டு
வலிக்கிறது மனங்கள்......
கொள்ளிவால் பேய்களாய்
கொழுந்து விட்டு எரிகிறார்கள்.
கள்ளிக்காட்டிடை நின்று
எள்ளி நகையாடலாமென்று
தள்ளிப்போய்விடுங்கள்.
கிள்ளி எறிந்திடுவான் தமிழன்.
கானல் நீரில் கூட
கனவு காணாதீர்கள் எவரும்.
கரிகாலன் ஆகலாமென்று
கந்தக ஆவிகள் உங்களை அழித்துவிடும்.
-வி.எஸ்.சிவகரன்-
(குறிப்பு = அனாகரிகமான பின்னூட்டங்கள் பதிவிடுவது ஏற்புடையது அல்ல)
ஒய்யார நினைவுகளில் ஒப்பாரி இடுகிறார்கள்.
Reviewed by Author
on
May 04, 2018
Rating:

No comments:
Post a Comment