மன்னார் மாந்தைமேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வு-photoes.viedos
மன்னார் மாந்தைமேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை 3-05-2018 மாலை- 3- 00மணியளவில் மாந்தைமேற்கு சபை மைதானத்தில் மாந்தைமேற்கு பிரதேச சபையின் செயலாளர் திரு. நாவலன் தலைமையில் இடம் பெற்றது
-இதன் போது விருந்தினர்களாக அமைச்சர் றிஸாட் பதியுதீன்,வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப், திரு.ஜெயதிலகமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உள்ளடங்களாக மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மன்னார் பிரதேச சபை செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச சபைத் தலைவர் செல்லத்தம்பு, அட்டாளைச் சேனைபிரதேச சபை உறுப்பினர் அன்சில், முன்னாள் உப வேந்தர் கலாநிதி இஸ்மாயில், குருநகல் மாநகரசபை உறுப்பினர் அசார்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதன் போது மன்னார் மாந்தைமேற்கு பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 23உறுப்பினர்களையும் வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
மாணவர்களின் பாண்ட்வாத்திய இசையுடன் புதிய உறுப்பினர்கள்,மற்றும் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு, மரம் நடுகை நிகழ்வும் மணவிகளின் நடனமும் ரெட்ணம் ஐயாவின் வாழ்த்துக்கவியும் மாந்தைமேற்கு பிரதேச சபையின் செயலாளர் திரு. நாவலன் தலைமையில் இடம் பெற்றது.
பிரதமவிருந்தினர் உரையினை அமைச்சர் றிஸாட் பதியுதீன்,அவர்களும்
தலைமையுரையினை மாந்தை மேற்கு பிரதேச சபைத் தலைவர் செல்லத்தம்பு, அவர்களும் வழங்கினர்
விருந்தினர் உரையின் சாரம்சமாக.......
மன்னார் மாவட்டத்தின் பிரதான சபையாகவும் பழமையானதும் புகழ்மிக்க இரண்டு வணக்க வழிபாட்டு தளங்களான மடுத்தேவாலயம் மற்றும் திருக்கேதிச்சரம் அமைந்துள்ள சபையாகும் இங்கு மூவின மக்களும் வாழ்கின்றனர்..
யுத்தத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான பிரதேசமாகவும் இரண்டு சபைகளை கொண்டதுமான மாந்தை மேற்கு பிரதேச சபை கொஞ்சம் அபிவிருத்தி கண்டுள்ளது.
இனிவரும் காலத்தில்ன் உள்ள 04 ஆண்டுகளில் இலங்கையில் உள்ள உள்ளூராட்ச்சி சபைகளிலும் பார்க்க முதன்மையான சபையாக மாந்தைமேற்கு பிரதேச சபை உருவாக்குவதற்கு இனம் மதம் கடந்து பிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றாக ஓரணியில் செயற்படவேண்டும்.
ஏன்னெனில் மக்கள் அனைத்து கட்ச்சிகளின் உறுப்பினர்களையும் தங்களது பிரதேச அபிவிருத்திக்காக தெரிவு செய்துள்ளார்கள் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக செயற்பட்டு அபிவிருத்தியில் இன்றிலிருந்து இணைவோம்
தொகுப்பு -வை-கஜேந்திரன்-
மன்னார் மாந்தைமேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வு-photoes.viedos
Reviewed by Author
on
May 04, 2018
Rating:

No comments:
Post a Comment