முல்லைத்தீவில் தேடிவந்த பெண்ணை எச்சரித்த அமைச்சர்: நடந்தது என்ன? -
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கி வைப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்றைய தினம் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ளார்.
குறித்த நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர் அமைச்சரின் வருகையை அறிந்த கேப்பாப்புலவு நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் அமைச்சரிடம் தமது காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாட வருகைத்தந்திருந்தனர். தங்களது காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து மீட்பது தொடர்பில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என இதன்போது கேப்பாப்புலவு மக்கள் அமைச்சரிடத்தில் கவலை வெளியிட்டிருந்ததுடன் சிலர் அமைச்சரது காலில் விழுந்து மன்றாடவும் செய்தனர்.
இந்நிலையில், குறித்த மக்கள் கூட்டத்தினரிடையில் ஒரு பெண் அமைச்சரிடத்தில் பேச முற்படுகையில், உங்களுடன் கதைக்கு எனக்கு விருப்பமில்லை, என்னுடன் கதைக்க வேண்டாம், தயவுசெய்து நிறுத்துங்கள், இங்கிருந்து வெளியேறுங்கள் என கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார்.
மேலும், தமது காணிகள் தொடர்பாக மக்கள் உதவிகோரியபோது உங்கள் மந்திரியிடம் கேளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவை கைக்காட்டி மக்களின் கோரிக்கையை உதாசீனம் செய்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் மக்களின் கருத்தை உதாசீனம் செய்ததும், எச்சரித்ததும் மக்கள் மத்தியில் பெரிதும் விமர்சனத்தையும், விசனத்யும் ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவில் தேடிவந்த பெண்ணை எச்சரித்த அமைச்சர்: நடந்தது என்ன? -
Reviewed by Author
on
May 27, 2018
Rating:
Reviewed by Author
on
May 27, 2018
Rating:


No comments:
Post a Comment