பெற்றோரை பார்க்க இலங்கை வர தயாரான மாணவன் திடீரென மரணம் -
பெற்றோரை பார்ப்பதற்காக இலங்கை வர தயாரான இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜப்பான், நகானோ, UEDA, nagano வர்த்தக கல்லூரியில் கல்வி கற்ற சினேத் ஷான் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நுரையீரலில் இரத்த உறைவு ஏற்பட்டமையினால் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது மாரடைப்பு ஏற்பட்டமையினால் நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார்.
பெற்றோரை பார்ப்பதற்காக நாளையதினம் இலங்கைக்கு வருவதற்கு டிக்கட் ஒதுக்கியிருந்தார். இந்நிலையில் சினேத் ஷான் உயிரிழந்தமை குறித்து அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இலங்கை நண்பர்கள் பலரின் மனதை வென்ற இந்த இளைஞரின் சடலம் தற்போது ஜப்பான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சினேத் ஷானின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பெற்றோரை பார்க்க இலங்கை வர தயாரான மாணவன் திடீரென மரணம் -
Reviewed by Author
on
May 31, 2018
Rating:

No comments:
Post a Comment