இலங்கையிலிருந்து இளம் விஞ்ஞானிகள் நான்கு பேர் அமெரிக்காவிற்கு பயணம் -
இவர்களுக்கான பயணச்சீட்டு கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணனால், அவரது காரியாலயத்தில் வைத்து இன்று காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியும் கலந்து கொண்டார்.
அமெரிக்காவின் இன்டல் நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சி எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை பெனின்சுலா நகரில் நடைபெறவுள்ளது.
குறித்த கண்காட்சியில் சர்வதேச ரீதியாக 72 நாடுகளை சேர்ந்த 1700 மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 2007ம் ஆண்டு முதல் இலங்கை மாணவர்கள் தொடாச்சியாக இதுவரை இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதுடன், இதன்போது அவர்கள் அங்கு நடைபெறுகின்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.
இலங்கை பொறியியலாளர் கல்வியகம் வருடந்தோறும் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களை தெரிவு செய்து இரண்டு கட்டமாக போட்டிகள் நடத்துகின்றன.
இந்த போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுகின்ற மாணவர்களை வருடந்தோறும் அமெரிக்காவில் நடைபெறுகின்ற கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள். அதன் அடிப்படையிலேயே இந்த வருடமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி புனித அன்தனிஸ் கல்லூரியின் கிம்ஹான் விஜேவர்தன, கண்டி புனித அன்தனிஸ் கல்லூரியின் கஜிந்து பண்டார , கந்தானை டெமகினோன் கல்லூரியின் சுபுன்சில்வா, புத்தளம் ஆனந்த தேசிய கல்லூரியின் ருமல் இந்துவர (புத்தளம்) ஆகிய நான்கு மாணவர்களே இந்நிகழ்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் அனைவரும் எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கையில் இருந்து பயணமாகவுள்ளனர்.
இலங்கையிலிருந்து இளம் விஞ்ஞானிகள் நான்கு பேர் அமெரிக்காவிற்கு பயணம் -
Reviewed by Author
on
May 10, 2018
Rating:

No comments:
Post a Comment