நான்கு மாதங்களுக்குள் 17ஆயிரத்து 500 பேர் டெங்கு நோயால் பாதிப்பு -
2018ம் ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் நாடுமுழுவதும் 17 ஆயிரத்து 500 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான புள்ளிவிபரங்களை தேசிய டெங்கு ஒழிப்பு செயலகம் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது.
அதே நேரம் 2017ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 60வீதத்தினால் குறைந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு செயலகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய கோடை மழை காரணமாக டெங்கு மீண்டும் தீவிரம் பெறும் நிலை காணப்படுவதால் இம்மாதம் 10,11ம் திகதிகளில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை மேல்மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நான்கு மாதங்களுக்குள் 17ஆயிரத்து 500 பேர் டெங்கு நோயால் பாதிப்பு -
Reviewed by Author
on
May 10, 2018
Rating:

No comments:
Post a Comment