வெள்ளைப்படுதல்! பெண்களுக்கான அவசியமான மருத்துவம் -
இதனை கூச்சத்தின் காரணமாக பெண்கள் வெளியே சொல்லவோ மருத்துவரிடம் செல்லவோ யோசிப்பார்கள். ஆனால் இது தவறு.
உரிய நேரத்தில் கவனிக்காமல் விட்டு விட்டால் பெண்களின் இனவிருத்தி உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு அல்லாமல் அவற்றை நீக்கவும் வேண்டி வரலாம். ஆகவே ஆரம்ப காலத்திலேயே கவனித்தல் நல்லது.
- இரவில் சிறிது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலையில் அந்த நீருடன் வெந்தயத்தையும் மென்று முழுங்க வேண்டும். இதன் மூலம் உடல் உஷ்ணம் குறைந்து வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.
- இளநீரில் ஒரு ஸ்பூன் சந்தனத்தூளை கலந்து , அந்த நீரை வடித்துப் பருகி வரலாம்.
- தண்டு கீரையின் தண்டுகளை மட்டும் எடுத்து வெந்நீரில் வேகவைத்து உப்பு போட்டு இந்த நீரை ஒரு நாளைக்கு இரு முறை குடித்து வர, வெள்ளைப்படுதல் குணமாகும்.
- வெள்ளை படும் சமயங்களில் வெயில் நேரங்களில் தினமும் ஒரு கப் வெள்ளைப்பூசணிச்சாறை குடித்து வர பலன் கிடைக்கும்.
- அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகுவதால் உடல் சூடு குறைந்து வெள்ளைப்படுதல் நிற்கும்.
- சோற்றுக் கற்றாழை ஜெல்லை கழுவி மோருடன் சேர்த்து அரைத்துக் குடிக்கவும் உடல் சூடு தணிந்து, ஒரே நாளில் வெள்ளைப்படுதல் கட்டுக்குள் வரும். அதே போல இந்த ஜெல்லை நீருடன் அரைத்து, அந்த பகுதியில் பேக் போட்டுவர வெள்ளைப்படுதல் குணமாகும்.
- சப்ஜாவிதைப் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து பருகி வந்தால் சரியாகும்.
- வேப்பம்பட்டை மற்றும் சீரகத்தை ஒன்றாக அரைத்து வைத்து, இந்தப் பொடியில் கொஞ்சம் எடுத்து நீரில் குழைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போல போட்டு 10 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவி விடவும் . இதன் மூலம் அங்குள்ள கிருமிகள் அழிந்து விடும்.
வெள்ளைப்படுதல்! பெண்களுக்கான அவசியமான மருத்துவம் -
Reviewed by Author
on
May 06, 2018
Rating:
No comments:
Post a Comment