250 குடும்பங்களினுடைய குடிநீர் தேவை இன்று பூர்த்தி -
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விசுவமடு - கல்லாறுக் கிராமத்திற்கான குடிநீர் விநியோகத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.இந்த நிகழ்வு, இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
விசுவமடு கல்லாறு கிராமத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களினுடைய குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபையின் 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த குடிநீர் வழங்கலுக்கான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையினுடைய தவிசாளர் அ.வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன், பிரதேச சபையினுடைய உறுப்பினர்கள், மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
250 குடும்பங்களினுடைய குடிநீர் தேவை இன்று பூர்த்தி -
Reviewed by Author
on
June 03, 2018
Rating:

No comments:
Post a Comment