அண்மைய செய்திகள்

recent
-

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: 30 ஆண்டுகளுக்கு பின் விமானி உயிருடன் திரும்பிய அதிசயம்! -


ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானத்தின் விமானி, தற்போது 60வது வயதில் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.
கடந்த 1979ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே போர் நடைபெற்றது. அந்த போர் சுமார் 10 ஆண்டுகள் வரை நீடித்தது.

அதன் பின்னர், சோவிய ரஷிய படைகள் திரும்பப் பெறப்பட்டன. அப்போது 300 வீரர்கள் மாயமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 30 வீரர்கள் மட்டும் தங்களது நாட்டுக்கு திரும்பினர்.
ஆனால், மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷிய விமானப்படை விமானி ஒருவர், தனது தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
செர்ஜி பேண்டலிக் எனும் அவர், ரஷியாவின் ரோஸ்டல் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவார். போர் நடந்தபோது செர்ஜி, வடக்கு காபூலில் பக்ராம் விமான படை தளத்தில் முகாமிட்டிருந்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டபோது அவரது போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே, அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அவர் 30 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யாவிற்கு வந்து அவரது குடும்பத்தினரை சந்தித்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்த குடும்பத்தினர், செர்ஜியை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.
செர்ஜி பேண்டலிக் தனது 30வது வயதில் மாயமானார். தற்போது அவருக்கு 60 வயதாகும் நிலையில், அவரது மகளுக்கு 31 வயதாகிறது. செர்ஜியின் தாயாரும், தங்கையும் இன்னும் உயிருடன் தான் உள்ளனர்.
இதுகுறித்து செர்ஜி பேண்டலிக் கூறுகையில், ‘எனது இறுதி காலத்தை ஆப்கானிஸ்தானில் தங்கி கழிக்க உள்ளேன். ஏனெனில், ஆப்கானிஸ்தான் மக்கள் மிகவும் அன்பானவர்கள். மேலும் உபசரிப்பதில் சிறந்தவர்கள்’ என தெரிவித்துள்ளார்.


me.me
me.me

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: 30 ஆண்டுகளுக்கு பின் விமானி உயிருடன் திரும்பிய அதிசயம்! - Reviewed by Author on June 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.