7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் -
முன்னாள் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், சிறையில் உள்ள 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, அவர்களது சிறைத்தண்டனை, குடும்ப சூழல், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியுள்ளது.
பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 27 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. 19 வயதில் சிறைக்கு சென்ற அவர், 27 வருடங்களை சிறையில் கழித்துள்ளார்.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில், மத்திய அரசு திடீரென தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் -
Reviewed by Author
on
June 12, 2018
Rating:

No comments:
Post a Comment