மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்.(படம்)
(இரண்டாம் இணைப்பு)
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும்,பிரபல எழுத்தாளரும்,கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை காலமானார்.
-நீண்ட நாற்களாக சுகவீனம் அடைந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் மன்னார் மாவட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டவர்.
பல வருடங்களுக்கு முன்னர் 'மக்கள்' என்னும் பத்திரிகையை ஆரம்பித்து நடாத்தியதால் 'மக்கள் காதர்' என்னும் சிறப்புப்பெயரைப் பெற்றுக்கொண்டார்.
பத்திரிகை நிருபராகவும் நீண்காலமாகப் பணிபுரிந்து வந்த இவர் கருத்துக்களைத் துணிந்து தெரிவிக்கக்கூடியவராக இருந்து வந்ததோடு அதனால் பல அச்சுறுத்தல்களுக்கும் ஆளானவர்.
வடமாகாண ஆளுநர் விருது உள்ளிட்ட பல விருதுகளைத் தனதாக்கிக்கொண்ட இவர் மன்னார் தமிழ்ச்சங்கம் ஒரு கட்டத்தில் துவண்டு கிடந்த போது அது மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதற்கு நின்றுழைத்தவர்களுள் ஒருவர்.
தொடர்ந்தம் மன்னார் தமிழ்ச்சங்கம் மற்றும் பல்வேறு பொது அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றியவர்.
இவர் மூத்த இலக்கியவாதி கலைவாதி கலீல் அவர்களின் சகோதரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்.(படம்)
Reviewed by Author
on
June 10, 2018
Rating:

No comments:
Post a Comment