முல்லைத்தீவில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இளைஞன் பலி: சடலம் சற்றுமுன் மீட்பு -
முல்லைத்தீவு காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை, கற்பூரவெளி காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் முள்ளியவளை 1ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 22வயதுடைய மனோகரன் கஜிந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலத்தின் தலைப்பகுதியில் துப்பாக்கி சூட்டுகாயங்கள் காணப்பட்டமையினால் இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் பதில் நீதிபதி ரி.பரஞ்சோதி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
முல்லைத்தீவில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இளைஞன் பலி: சடலம் சற்றுமுன் மீட்பு -
Reviewed by Author
on
June 30, 2018
Rating:

No comments:
Post a Comment