மத்திய அரசாங்கம் உரிய பதில் தரவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும்! சுமந்திரன் எச்சரிக்கை -
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அத்துமீறி தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்களை வெளியேற்றுவதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருதங்கேணியில் தமிழ் மக்களிற்கு சொந்தமான நிலத்தில் நூற்றுக்கணக்கான வாடிகளை அமைத்துக்கொண்டு பெருமளவு சிங்கள மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக மோசமாக பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதேவேளை, இதன் காரணமாக தாங்கள் புலனாய்வுபிரிவினரின் கொலை மிரட்டலிற்கு உள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே சிங்கள மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கருத்து கொண்டு தெரிவித்துள்ள சுமந்திரன் தென்பகுதி மீனவர்களை உடனடியாக வெளியேற்றவேண்டும் என மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் திகதிக்குள் மத்திய அரசாங்கம் உரிய பதிலை வழங்கவில்லை என்றால் ஆறாம் திகதி பாரிய போராட்டத்திற்கு மக்கள் தயாராகவேண்டும்.
இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசாங்கம் உரிய பதிலைத் தரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசாங்கம் உரிய பதில் தரவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும்! சுமந்திரன் எச்சரிக்கை -
Reviewed by Author
on
June 03, 2018
Rating:

No comments:
Post a Comment