சூப்பர் பிரபல நடிகருடன் இணையும் வடிவேலு!
நகைச்சுவைகளில் இன்றளவும் பலருக்கும் மன மகிழ்ச்சி தருவது வடிவேலுவின் காமெடி தான். பல படங்களில் நடித்து ஒரு ஹீரோவுக்கு இணையாக இருந்தவர்.
அவர் படத்தில் இருந்தால் தான் நான் நடிப்பேன் என சொன்ன நடிகர்களும் உண்டு. ஆனால் அவரை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்தியது இம்சை அரசன் 23 ம் புலிகேசி தான்.
இந்நிலையில் அவர் இப்படத்தின் 2 வது பாகத்தில் நடிப்பதில் சர்ச்சை எழுந்தது. நடிக்க முடியாது என கூறியவர் பின் நடிக்கிறேன் என கூறியுள்ளார். தற்போது அவர் சுராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இதில் விமல் நடிக்கிறார். தற்போது நடிகர் பார்த்திபனும் இணைந்திருக்கிறார். பார்த்திபன் வடிவேலுவின் காமெடிக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இப்படத்தில் அது இருக்காது என தெரிகிறது.
மாப்பிள்ளை, படிக்காதவன் படங்களை இயக்கிய சுராஜ் கடைசியாக விஷால் நடித்த கத்தி சண்டை படத்தை இயக்கியிருந்தார்.
சூப்பர் பிரபல நடிகருடன் இணையும் வடிவேலு!
Reviewed by Author
on
June 29, 2018
Rating:

No comments:
Post a Comment