103 அகதிகள் பலி...லிபியா படகு விபத்தில்
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் இருந்து கடந்த 29-ந் தேதி 123 அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு ரப்பர் படகில் மத்திய தரைக்கடல் வழியாக பயணம் மேற்கொண்டனர். அவர்களுடைய படகு தஜோரா கடற்கரையோரம் சென்றபோது திடீரென படகுக்குள் நீர் புகுந்து அது கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் படகில் இருந்த 70 ஆண்கள், 30 பெண்கள், 3 குழந்தைகள் என 103 பேர் கடலில் மூழ்கி உயிர் இழந்தனர். சிறிய படகில் அதிகமானோர் பயணம் செய்ததும், கடல் சீற்றமும்தான் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை உறுதி செய்த ஐ.நா. சபையின் அகதிகளுக்கான கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில்இ “இந்த துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக ஆழந்த அனுதாபங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.
படகு விபத்தில் உயிர் தப்பிய ஒருவர் கூறுகையில், “எனது வாழ்க்கையில் இது மிகவும் கடினமான நாள். என்னைக் காப்பாற்றிக்கொள்வதா? அல்லது எனது குழந்தைகள், நண்பர்களை காப்பாற்றுவதா? என்பது தெரியாமல் பரிதவிப்புக்கு உள்ளாகிவிட்டேன்” என்றார்.
103 அகதிகள் பலி...லிபியா படகு விபத்தில்
Reviewed by Author
on
July 04, 2018
Rating:

No comments:
Post a Comment