வருமானங்கள் இன்றி தவிக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் -
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தமக்கான குடும்ப வருமானங்கள் இன்றி பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியாக காணப்படும் துணுக்காய் பிரதேசத்தில் வாழ்ந்துவரும் 3942 குடும்பங்களில் 610 வரையான குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக காணப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது நிலவும் வறட்சி, தொழில் வாய்ப்பின்மை போன்ற காரணங்களால் இப்பகுதியில் வாழும் சுமார் 610 வரையான பெண்தலைமைத்துவ குடும்பங்களில் கூடுதலான குடும்பங்கள் தொழில் வாய்ப்புக்கள் இன்றி பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றன.
மேற்படி குடும்பங்கள் பல சுய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அதற்கான போதிய வருமானம் இன்மை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நுண்கடன் நிதி நிறுவனங்களில் கூடுதலான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகூடிய வட்டிக்கு கடன்களை பெற்று அவற்றை மீளச்செலுத்துவதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
வருமானங்கள் இன்றி தவிக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் -
Reviewed by Author
on
July 04, 2018
Rating:

No comments:
Post a Comment