3 ஆண்டுகளில் தாயகம் திரும்பிய 3 ஆயிரம் இலங்கை தமிழர்கள் -
கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 1984ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இன வன்முறைகளைத் தொடர்ந்து 3.04 இலட்சம் பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்தனர்.
இலங்கையில், போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதிலிருந்து பலர் இலங்கைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டு 1520 அகதிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.
இந்த ஆண்டு மே வரை 557 அகதிகள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
தற்போது தமிழத்தின் 24 மாவட்டங்களிலுள்ள 107 முகாம்களில் 61 ஆயிரத்து 422 அகதிகள் வசித்து வருகின்றனர். 35 ஆயிரத்து 316 அகதிகள் முகாம்களுக்கு வெளியே தங்கியுள்ளனர்.
3 ஆண்டுகளில் தாயகம் திரும்பிய 3 ஆயிரம் இலங்கை தமிழர்கள் -
Reviewed by Author
on
July 09, 2018
Rating:

No comments:
Post a Comment