நாடுகடத்தப்படும் அபாயம்: வெளிநாட்டில் கண்ணீர் வடிக்கும் இலங்கை பெண்ணின் குடும்பம் -
கேரளாவின் கொல்லம் நகரை சேர்ந்தவர் மதுசூதனன், கடந்த 1979ம் ஆண்டு ஷார்ஜாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர், சிறு சிறு வேலைகளை பார்த்து வந்தார்.
1988ம் ஆண்டு இலங்கை பெண்ணான ரோஹினி என்பவரை திருமணம் செய்து கொண்டார், அடுத்த ஆண்டு இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் வேலையும் பறிபோக சட்டவிரோதமாக வசிக்கத் தொடங்கினர், தொடர்ந்து மாதம் 4000 திர்ஹாம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 1992 முதல் 1998ம் கால இடைவெளியில் இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன, ஷார்ஜாவில் வசித்த மக்களின் உதவியுடன் நால்வருக்கு இந்திய கடவுச்சீட்டு எடுக்க முடிந்தது, அதுவும் 2012ம் ஆண்டு காலாவதியாக எந்தவித ஆவணங்களும் இன்றி 30 வருடங்களாக வசித்து வந்தனர்.
தனது பிள்ளைகளுக்கும் விசா எடுக்க முடியாத நிலையில், வீட்டிலேயே ரோஹினி பாடம் கற்பித்துள்ளார்.
இந்நிலையில் எந்நேரத்திலும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அப்படியே நாடு கடத்தப்பட்டாலும் மதுசூதனன் மற்றும் பிள்ளைகள் இந்தியாவுக்கும், ரோஹினி இலங்கைக்கும் கடத்தப்படலாம்.
இதுகுறித்து மதுசூதனன் கூறுகையில், இந்த சூழலில் நான் கேரளாவிற்கு செல்ல விரும்பவில்லை, அனைத்து பிரச்சனைகளும் முடிந்த பின்னர் எனது குடும்பத்துடன் செல்ல வேண்டும்.
இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் பலரும் எங்களுக்கு உதவி செய்கின்றனர், வேலை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
எனது மனைவி இலங்கை என்பதால் குடும்பம் சிதைந்துவிடும், அதை நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது மன்னிப்பு சபையின் முடிவை நோக்கி எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடுகடத்தப்படும் அபாயம்: வெளிநாட்டில் கண்ணீர் வடிக்கும் இலங்கை பெண்ணின் குடும்பம் -
Reviewed by Author
on
July 10, 2018
Rating:

No comments:
Post a Comment