மன்னாரில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான நிகழ்வு…
மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு மனித நேயப் பணிகளை ஆற்றிவரும் கறிற்றாஸ்-வாhழ்வுதய பணியகத்தின் “உதவிக்கரம்”
(Centre For Disabled) பிரிவினால் “உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்” என்ற தொனிப்பொருளில் இரத்ததான முகாம் இவ்வருடம் 05.07.2018 வியாழன் அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் இம்மாதமுதல் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் புதிய இயக்குனராக பணிப் பொறுப்பேற்கவுள்ள அருட்பணி செ. அன்ரன் அடிகளாரும் நானாட்டான் முன்னைநாள் பங்குத்தந்தை அருட்பணி அருள்ராஜ் அடிகளாரும் பங்கேற்றதோடு மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் பல்வேறு அரச திணைக்களங்கள்ää தனியார் நிறுவனங்கள்ää நிதிசார் நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்த 59 குருதி நன்கொடையாளர்கள் இதில் பங்கெடுத்திருந்தனர்.
வருடாந்தம் கறிற்றாஸ்-வாழ்வுதயத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இந் நிகழ்விற்கு இம்முறை மன்னார் சிவா கோட்டல் உரிமையாளர் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்ததோடு இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியின் ஊழியர்களுக்கும் இந் நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் கறிற்றாஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை ம.ஜெயபாலன் அடிகளார் அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றார்.
மேற்படி கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனமானது கடந்த 37 ஆண்டு காலமாக மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றி வருவதோடு அதன் உதவிக்கரப் பிரிவினூடாக கடந்த 19 ஆண்டுகாலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயவங்கள் வழங்கும் சேவை சார்புறுப்புக்கள் வழங்கும் சேவை சக்கர நாற்காலிகள் வழங்கும் சேவை துணை சாதனங்கள் வழங்கும் சேவை இயன்மருத்துவ சேவைää உளவள ஆற்றுப்படுத்துதல் சேவை போன்ற பல்வேறு சேவைகளை ஆற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான நிகழ்வு…
Reviewed by Author
on
July 06, 2018
Rating:

No comments:
Post a Comment