வடமாகாண தட களத் தொடரில்......மன்னார் கல்வி வலயம் முன்னிலையில்...
வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தட களத் தொடரில் நேற்றைய மூன்றாம் நாள் நிலவரத்தின் படி பார்க்கையில் மன்னார் கல்வி வலயம் முன்னிலையில் உள்ளது.
406 புள்ளிகளைப் பெற்று மன்னார் கல்வி வலயம் முன்னிலையில் உள்ளது. 386 புள்ளிகளுடன் வலிகாமம் கல்வி வலயம் இரண்டாவது இடத்தில் உள்ளது. யாழ்ப்பாணக் கல்வி வலயம் 313 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
அனேகமாக மேற்குறித்த மூன்று வலயங்களுக்கு இடையிலேயே முதலிடத்தைப் பெறுவது எந்த வலயம் என்கிற போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் இவற்றைத் தவிர ஏனைய எந்தக் கல்வி வலயங்களும் நேற்றைய நாள் முடிவில் 200 புள்ளிகளை எட்டவில்லை.
வடமாகாண தட களத் தொடரில்......மன்னார் கல்வி வலயம் முன்னிலையில்...
Reviewed by Author
on
July 10, 2018
Rating:

No comments:
Post a Comment