மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலை மாணவன் சாதனை...
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2018 ம் ஆண்டிற்கான விளையாட்டு விழாவானது கடந்த வாரம் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.
அதில் மன்னார் வலயத்தைச் சேர்ந்த மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலை மாணவன் க.மாலிக் 100M, 60M ஆகிய போட்டிகளில் தங்கப்பதக்கத்தினை தனதாக்கி முன்னைய சாதனையை முறியடித்து புதிய சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்..
மேலும் 100M தூரத்தினை ஏற்கனவே காணப்பட்ட 0.15.20 S நேர பெறுதியினை முறியடித்து 0.14.00 செக்கன்களிலும் .60M தூரத்தினை ஏற்கனவே காணப்பட்ட 0.10.00 S நேர பெறுதியினை முறிடித்து 0.08.70 செக்கன்களிலும் ஓடி புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.
க.மாலிக் இம்மாணவனையும் பயிற்சியளித்த ஆசிரியர் மற்றும் அதிபர் பாடசாலைச்சமூகம் அனைவரையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலை மாணவன் சாதனை...
Reviewed by Author
on
July 14, 2018
Rating:

No comments:
Post a Comment