மீண்டும் மிரட்டவரும் பிரபுதேவா- தமிழில் குவியும் படங்கள்
தமிழ் மட்டுமில்லாமல் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என அழைக்கப்படுபவர் பிரபுதேவா. நடனத்தில் மிரள வைக்கும் இவரது நடனங்களை படங்களையும் தாண்டி பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கலாம்.
அப்படிப்பட்ட இவரின் சில படங்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் தர கூடியதாகவும் இருக்கும் அதுபோன்ற ஒரு படம் தேவி. ஏ.எல்.விஜய் இயக்கியிருந்த இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார்.
கடந்த 2016ல் ஹாரர் மூவியாக உருவாகியிருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறதாம். இதையும் விஜய் தான் இயக்குகிறாராம். ஆனால் இது தேவியின் தொடர்ச்சியா அல்லது வேறு கதையா என்பது விரைவில் தான் தெரியவரும்.
பிரபுதேவா தற்போது லக்ஷ்மி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழில் வரிசையாக அவரது படங்கள் வர இருக்கின்றன.
மீண்டும் மிரட்டவரும் பிரபுதேவா- தமிழில் குவியும் படங்கள்
Reviewed by Author
on
July 14, 2018
Rating:

No comments:
Post a Comment