மீன் பிடிக்கும் வலையில் சிக்கிய 1000 கிலோ வெடிகுண்டு!
ஆங்கிலக் கால்வாயில் மீன் பிடிக்கச் சென்ற அந்த மீன்பிடி படகின் வலையில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத பிரமாண்ட குண்டு ஒன்று சிக்கியது.
உடனடியாக மீனவர்கள் கடற்படைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த கடற்படை வீரர்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உதவியுடன் அந்த வெடிகுண்டை வலையிலிருந்து விடுவித்து கடற்படுகையில் மெதுவாக வைத்தனர்.
ஏனென்றால் அந்த குண்டு இன்னும் வெடிக்கக்கூடிய நிலையில்தான் உள்ளது. கொஞ்சம் தவறாக அசைக்கப்பட்டிருந்தாலும் அது வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளது.
உடனடியாக மீனவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் அந்த வெடிகுண்டு அடுத்த வாரம் செயலிழக்கச் செய்யப்பட உள்ளது.
அந்த வெடிகுண்டைக் கண்டதும் வலையிலிருந்து அகற்ற முயற்சி செய்யாமல் தங்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்ததற்காக கடற்படையினர் மீனவர்களைப் பாராட்டியுள்ளனர்.
மீன் பிடிக்கும் வலையில் சிக்கிய 1000 கிலோ வெடிகுண்டு!
Reviewed by Author
on
August 18, 2018
Rating:

No comments:
Post a Comment