ஐநா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார் -
அவருக்கு வயது 80. அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள கோபி அன்னன், பணி ஓய்வுக்கு பின்னர் மனித நேய திட்டங்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி வந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் கறுப்பின தலைவர் கோபி அன்னான்.
இவர் 1997 முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார்.
அதன் பின்னர் சிரியாவுக்கான ஐ.நா தூதுவராக பணியாற்றினார். உள்நாட்டு போரினால் சீரழிந்து வந்த சிரியா மீது மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐநா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார் - 
![]() Reviewed by Author
        on 
        
August 18, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
August 18, 2018
 
        Rating: 
       
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment