அண்மைய செய்திகள்

recent
-

150 வருட கால குழப்பத்திற்கு தீர்வு -அசத்திய விஞ்ஞானிகள்


ஒளி தான் எதிர்கொள்ளும் பொருளொன்றின் மீது எவ்வளவு அமுக்கத்தை வழங்கக்கூடும் என்ற பிரச்சனை விஞ்ஞானிகளை 150 வருடங்களாக குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.

தற்போது இதற்கு தீர்வு கிடைத்துள்ளது. ஆய்வாளர் குழுவொன்று ஒரு பொருளின் மீது போட்டோன்கள் கொண்டுள்ள விளைவினை அளவிடும் முறையொன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
என்னதான் போட்டோன்கள் திணிவில்லையென்றாலும், அது உந்தத்தைக் கொண்டுள்ளது. இது விஷேட சார்பியலின் கட்டமைப்பினுள் விளக்கப்படலாம்.

மேலும் இவ் உந்தம் விசையை உருவாக்கக்கூடியது. இது 1619 இல் கொள்கையளவில் வெளியிடப்பட்டிருந்தது. De Cometi மற்றும் Johannes Kepler வரைந்த ஆய்வுக் கட்டுரையில், சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிரின் அமுக்கத்தால் தான் வால் மீன்களின் வால் தடங்கள் எப்பொழுதும் சூரியனுக்கு எதிர்த்திசையிலிருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தனர்.
1873 இல் James Clerk எனும் பௌதீகவியலாளர் இது உந்தத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்றார்.

Clerk Maxwell - இவரது கொள்கைகள் தான் பின்னர் ஜன்ஸ்டீனின் சார்பியல் ரீதியான கோட்பாடுகளுக்கு உதவியிருந்தது. இவர் ஒளியானது மின்காந்தக் கதிர்ப்பின் ஒருவகை என சந்தேகித்திருந்தார். மேலும் இது உந்தத்தைக் காவுவதாகவும், இதனால் அமுக்கம் ஏற்படுத்தப்படுகிறது என்றும் சந்தேகித்திருந்தார்.

ஆனால் இதனால் உண்டாகும் உந்தம் மற்றும் அமுக்கம் என்பன மிகச் சிறிது. இதன் காரணத்தால் இதனை நேரடியாக அளப்பதென்பது மிகக் கடினம்.
இதுவரையில் எவ்வாறு இந்த உந்தம் விசையாக மாற்றப்படுகிறது என்பது பற்றி நாம் அறியமுடிந்திருக்கவில்லை. காரணம் அது காவும் உந்தம் மிகச் சிறியதென்பதால் அதை உணரும் உபகரணத்தொகுதி நம்மிடம் இல்லை.
ஆனால் தற்போது Slovenia மற்றும் Brazil நாடுகளைச் சேர்ந்த Chau மற்றும் அவரது நண்பர்கள் போட்டோன்களின் கணத்தாக்கத்தால் உண்டாகும் விளைவுகளை மதிப்பிடும் வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் தளவாடியைச் சுற்றி ஒரு கருவியை உருவாக்கியிருந்தனர். புற விளைவுகளால் உண்டாகும் தடங்கல்களைக் கட்டுப்படுத்தவென வெப்பப் பாதுகாப்புக் கவசம் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஒலிப்புலன் சார்ந்த உணரிகள் பொருத்தப்பட்டது.

அவர்கள் தளவாடி மீது லேசர் சமிக்ஞைகளை அனுப்பிய போது இது அதன் மேற்பரப்பில் நீட்சியடையக்கூடிய அலைகளைத் தோற்றுவித்திருந்தது. இது ஒலி உணரிகளால் உணரப்பட முடிந்திருக்கிறது. இது தற்போது போட்டோன்களின் உந்தத்தால் உருவாகும் அமுக்கத்தைக் கணிப்பதற்குரிய வழியை நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றது.


150 வருட கால குழப்பத்திற்கு தீர்வு -அசத்திய விஞ்ஞானிகள் Reviewed by Author on August 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.