அண்மைய செய்திகள்

recent
-

31 வருடங்களுக்கு முன் இறந்த பெண்ணின் உடலிலிருந்து வெளியேறிய ரத்தம்!


ரஷ்யாவில் மலையேறும் போது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடல் 31 வருடங்களுக்கு மீட்கும் போது ரத்தம் வெளியேறியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தை சேர்ந்தவர் Elena Basykina (31). தன்னுனடய வாழ்நாளில் மலையேறுவதை மட்டுமே பொழுது போக்காக கொண்டிருந்த Basykina, திருமணம் கூட செய்து கொள்ளவில்லை.
இவர் கடந்த 1987-ம் ஏப்ரல் 10-ம் தேதியன்று, லெனின் சுற்றுலாக் கிளையிலிருந்து ஐரோப்பாவின் மிகப்பெரிய மலை என்று கருதப்படும் Mount Elbrus-ல் தன் நண்பர்களுடன் பயணித்துள்ளார்.

13,125 அடி உயரத்தில் சென்று கொண்டிருக்கும் போது மலையில் ஏற்பட்ட திடீர் அசாதாரண நிலையால் நிலை குலைந்து காணாமல் போயினர்.
அப்போதைய விளையாட்டு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் Alexey Yaroshevsky, உடனடி உத்தரவு பிறப்பித்து காணாமல் போனவர்களை மீட்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் ஒரு வருடமாக தொடர்ந்து தேடியும், அவர்களை பற்றிய எந்த வித தகவலும் தெரியவில்லை.

இந்தநிலையில் மழைக்கு சென்ற மீட்புக்குழு ஒன்று Basykina மற்றும் அவரது நண்பர்களின் உடல்களை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து மாஸ்கோ அறிவியல் நிறுவனத்தில் தொழிலாளி மன்மோகன் கூறுகையில், 31 வருடங்களுக்கு பிறகு Basykina பணியில் ஒரு மெழுகு சிலை போல இருந்தாள்.

அவருடன் அவரது சிறந்த நண்பர் வாலண்டினா லேபினா மற்றும் ஐந்து ஆண்கள் இறந்த நிலையில் இருந்தனர் என தெரிவித்தார்.

31 வருடங்களுக்கு முன் இறந்த பெண்ணின் உடலிலிருந்து வெளியேறிய ரத்தம்! Reviewed by Author on August 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.