மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 52 மீனவர்களுக்கு மீன்பிடி வலைத்தொகுதிகள் வழங்கி வைப்பு-(படம்)
மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 52 மீனவர்களுக்கு மீன்பிடி வலைத்தொகுதிகள் செவ்வாய்க்கிழமை31-07-2018 வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மீள் குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட மீன் பிடி வலைத் தொகுதிகலேமாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் வைத்து 52 மீனவர்களுக்கு வாழ்வாதார உதவியாக 31-07-2018 வழங்கப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதிஸ்வரன் தலைமையில் நடை பெற்ற குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், வன்னி மாவட்ட முஸ்லிம் பகுதிகளுக்கான முகாமையாளரும், மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான ஏ.சமீயூ முகம்மது பஸ்மி அவர்கள் தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான மேற்படி வாழ்வாதார உதவியான மீன்பிடி வலைத்தொகுதிகளை, மாந்தை மேற்கு பிரதேச செயலாளருடன் இணைந்து மீனவர்களுக்கு வழங்கி வைத்தார்.
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களின் பணிப்பின் பேரில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜே.பி.கொஸ்தா அவர்களின் நெறிப்படுத்தலில் சுமார் 55 லட்சம் ரூபா பெறுமதியான குறித்த மீன்பிடி வலைத்தொகுதிகள் விடத்தல்தீவு, தேவன்பிட்டி, கள்ளியடி
பாப்பாமோட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த வறிய மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செல்லத்தம்பு மற்றும் பிரதேச சபை உறுப்பினர் கந்தையா சௌந்தர நாயகம், மாந்தை மேற்கு பிரதேச செயலக திட்டப் பணிப்பாளர் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 52 மீனவர்களுக்கு மீன்பிடி வலைத்தொகுதிகள் வழங்கி வைப்பு-(படம்)
 
        Reviewed by Author
        on 
        
August 01, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
August 01, 2018
 
        Rating: 





No comments:
Post a Comment