யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வெளிப்படுத்துகை கண்காட்சி நிகழ்வு -
குறித்த நிகழ்வு, மட்டக்களப்பு சார்ல்ஸ் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
உண்மைக்கும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒன்றியத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் டீ. தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார். இந்த கண்காட்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் பின்னடைவுகள் போன்ற பெண்களை மையப்படுத்தி சித்தரிக்கப்பட்ட சித்திரங்கள் இங்கு காட்சி படுத்தப்பட்டிருந்தன இக்கண்காட்சி இன்று காலை முதல் மாலை வரை இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் அதிதிகளாக மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ராதா, குணரத்தின மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே டி .சந்திரபால மற்றும் உண்மைக்கும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒன்றியத்தின் உறுப்பினர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வெளிப்படுத்துகை கண்காட்சி நிகழ்வு -
Reviewed by Author
on
August 19, 2018
Rating:

No comments:
Post a Comment