இளைஞர்களே....இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா....
குடல்வால் அழற்சி நோயில் அதிகப்படியான வலி காணப்படும்.
இத்தகைய மோசமான குடல் வால் அழற்சிக்கான முக்கியமான அறிகுறிகளை பற்றி தெரிந்துக் கொள்ளவது மிகவும் அவசியம்.
அப்பெண்டிக்ஸின் முக்கிய அறிகுறிகள்
- வயிற்று பகுதியில் தூங்க முடியாத அளவிற்கு வலி ஏற்படும். இது சாதாரண வயிற்று வலி போல இருக்காது. மிகவும் வலி மிகுந்ததாய் இருக்கும்.
- அப்பெண்டிக்ஸ் ஏற்படவுள்ளது என்பதற்கான முதல் அறிகுறி தொப்புள் பகுதியிலும் வயிற்றின் கீழ் வலதுபுறத்திலும் வலி ஏற்படும். மேலும் இது குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் கீழ் வயிற்று பகுதியிலோ அல்லது வேறு வயிற்று இடங்களிலோ வலிகள் ஏற்படலாம்.
- வயிற்று வலியுடன் சாதாரண காய்ச்சலும் காணப்படும். அழற்சி மிக அதிகமாகும் போது காய்ச்சலின் வேகமும் அதிகமாகும்.
- இந்நோயில் அடுத்த முக்கியமான அறிகுறி குமட்டலும் அதனைத் தொடர்ந்து வாந்தியும் காணப்படும். இது சாதாரண இரைப்பை மற்றும் குடல் தாபிதத்தில் காணப்படும் குமட்டல், வாந்தி போன்றே இருக்கும். ஆனால், 12 மணிநேரத்திற்கு மேல் இந்த நிலை தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- பலருக்கு வயிற்று வலியுடன் கூடவே வயிற்றுப்போக்கும் காணப்படும். சிலருக்கு சீழ் கலந்த கழிச்சல் ஏற்படும். இந்த நிலையில் உங்கள் மருத்துவரை உடனே அணுகி மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.
- ஏப்பம் மற்றும் ஆசன வாய் வழியாக காற்றுப் பிரிவது அசாதாரண அறிகுறிகள் இல்லை என்றாலும் வயிற்று வலியுடனே இவை இருந்தால், மருத்துவரை உடனே ஆலோசிப்பது நன்று.
- உங்களுக்கு குடல் வால் அழற்சி ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள உங்களது அடிவயிற்றை நன்கு அமுக்கிப் பார்க்கவும். அப்போது பொறுக்க முடியாத வலி இருந்தால், இது குடல்வால் அழற்சியினால் ஏற்படுகிறது என்று அறிந்து கொள்ளவும்.
- சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். சிறுநீர் கழிக்கும் போது வயிற்று உறுப்புகளில் அழுத்தம் ஏற்படுவதால் இந்த வலி காணப்படுகிறது.
- லேசான அல்லது அதிக வலியானது, மேல் மற்றும் அடிவயிறு, முதுகு மற்றும் குடலில் காணப்படும்.
- குடல் வால் அழற்சிக்கான மற்றுமொறு அறிகுறியாக பசியின்மை கூறப்படுகிறது. உங்களுக்கு குடல் வால் அழற்சி ஏற்படும் போது சரியாக சாப்பிட தோன்றாது. வயிறு பகுதியில் எப்போதும் சூடாகவும், உப்புசமாகவும் இருப்பது போல உணர்வுகள் ஏற்படும்.
இளைஞர்களே....இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா....
Reviewed by Author
on
August 30, 2018
Rating:
No comments:
Post a Comment