மன்னாரில் புலவர் 'குருகுல நாட்டு தேவர்' இயற்றிய 'என்றிக் எம்பரதோர்' நாடகம் அரங்கேற்றம்.
புலவர் 'குருகுல நாட்டு தேவர்' இயற்றிய 'என்றிக் எம்பரதோர்' நாடகம் எதிர்வரும் 1ஆம், 2ஆம் திகதிகளில் மன்னாரில் அரங்கேற்றப்படவுள்ளது.
மன்னார் நறுவிலிக்குளம் கிராம மக்கள் இணைந்து வழங்கும் 'என்றிக் எம்பரதோர்' நாட விழா எதிர்வரும் 1 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் மாலை 6.30 மணிமுதல் நறுவிலிக்குளம் புனித யாகப்பர் ஆலய முன்றலில் இடம் பெறவுள்ளது.
குறித்த நாடக நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பி.ல.இம்மானுவேல் பெனாண்டடோ ஆண்டகை கலந்து கொள்ளவுள்ளார்.
மன்னாரில் புலவர் 'குருகுல நாட்டு தேவர்' இயற்றிய 'என்றிக் எம்பரதோர்' நாடகம் அரங்கேற்றம்.
Reviewed by Author
on
August 29, 2018
Rating:

No comments:
Post a Comment