மன்னார் இளைஞர் யுவதிகளுக்கோர் வாய்ப்பு...புகைப்பட தாகத்திற்கு ஒரு விருந்து!
புராதன மன்னாரை வெளிக்கொணர்வோம்! என்ற தொனிப்பொருளில் மன்னாரின் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கின் ஆதரவோடு தேசிய சமாதானப்பேரவையின் நிதியுதவியுடன் மன்னாரின் புராதனம், பழமை மற்றும் வரலாற்றை வெளிக்காட்டக்கூடிய புகைப்படங்களை தேடி அதை காட்சிப்படுத்தும் ஒரு முயற்சியை மன்னாரின் சமூக ஆர்வலர்கள் குழுவான Reveal Ancient Mannar (RAM குழு) முன்னெடுக்கிறது.
மன்னாரின் பழமையை எடுத்துவிளம்பும் கீழுள்ள வகையான புகைப்படங்களை தந்து இந்த மாபெரும் புராதன புகைப்பட கண்காட்சியில் பங்காளராகுங்கள்.
• தங்களிடம் முன்னரே உள்ள பழைய அரிய புகைப்படத்தின் பிரதியையும் போட்டிக்கு கையளிக்கலாம்.
• தற்போது புதிதாக கிளிக்செய்யும் மன்னாரிலுள்ள பழமையை இன்றும் பறைசாற்றும் விடயங்கள் பொருட்கள் பழக்கவழக்கங்களை சித்தரிக்கும் புகைப்படங்களையும் கையளிக்கலாம்.
• புகைப்பட அளவு: 8”X 12” (அச்சிட்டு கையளிக்கவேண்டும்).
• கலர் அல்லது கறுப்புவெள்ளை புகைப்படங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
• 1 நபரிடமிருந்து 5 புகைப்படங்கள் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்படும்.
• சேகரிப்பு முடிவுத்திகதி: 08-09-2018.
சிறந்த புகைப்படங்களை வழங்கும் முதல் 30 பேருக்கு சிறப்பான பரிசில்கள் நிச்சயம் உண்டு. எங்கே மன்னார் புராதன வரலாற்றில் ஒரு ஆக்கபூர்வமாக பங்காளராகுங்கள்.
புகைப்படங்களை கீழுள்ள முகவரியில் நேரடியாக கையளிக்கவும்.
இல.7, கொன்வன்ட் வீதி, பெற்றா, மன்னார்.
தொடர்புகளுக்கு: 075 9366 433, 076 3122 305.
பேஸ்புக் இணைப்பு: https://www.facebook.com/revealancient.mannar.7
மன்னார் இளைஞர் யுவதிகளுக்கோர் வாய்ப்பு...புகைப்பட தாகத்திற்கு ஒரு விருந்து!
Reviewed by Author
on
August 29, 2018
Rating:

No comments:
Post a Comment