மன்னாரில் பரிட்சையின் போது தொலைபேசியினை வைத்திருந்த இருவர் மீது சட்ட நடவடிக்கை
மன்னாரில் இடம் பெற்ற தொழில் நுட்பவியலாளர் தெரி பரிட்சையின் போது பரிட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த இரண்டு பரிட்சாத்திகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக பரிட்சை ஆணையாளர் களை மேற்கொண்டுள்ளார்.
மன்னார் எழுத்தூர் படசாலையில் 28-08-2018 செவ்வாய்க்கிழமை காலை தொழில் நுற்பவியலாளர் தெரிவு பரிட்சை இடம் பெற்றது.
இதன் போது பரிட்சை ஆரம்பமாகுவதற்கு முன்னர் பரிட்சை மண்டபத்தில் உள்ள அதிகாரிகளினால் பரீட்சாத்திகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதோடு, மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசி வைத்திருப்பவர்கள் அதனை அதிகாரிகளிடம் ஒபப்டைக்க அறிவித்தல் வழங்கப்பட்டது.
இதன் போது பலர் தமது கையடக்கத் தொலைபேசிகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் பரிட்சை ஆரம்பமாகி இடம் பெற்றுக் கொண்டிருந்த போது பரிட்சை ஆணையாளர் குறித்த மண்டபத்தினுள் சென்று திடீர் சோதனைகளை மேற்கொண்ட போது இரு பரிட்சார்த்திகள் இரகசியமாக கையடக்கத் தொலைபேசிகளை தம் வசம் வைத்திருந்த சிலையில் பிடிபட்டனர்.
-குறித்த இரண்டு பரீட்சாத்திகளின் கையடக்கத் தொலைபேசிகளையும் பரிட்சை ஆணையாளர் பறிமுதல் செய்துள்ளார்.
குறித்த இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுளள்தோடு, எதிர் வரும் 5 வருடங்களுக்கு எவ்வித தெரிவு பரிட்சைகளுக்கும் தோற்ற முடியாது தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தை மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மன்னாரில் பரிட்சையின் போது தொலைபேசியினை வைத்திருந்த இருவர் மீது சட்ட நடவடிக்கை
Reviewed by Author
on
August 29, 2018
Rating:

No comments:
Post a Comment