அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தொடர்ச்சியாக மீட்க்கப்படும் மனித எச்சங்கள்..படங்கள்



மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டு வருகின்றது குறித்த வளாத்தில் 28-08-2018 இன்றுடன் 59 வது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன

விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு  பணிகள் இடம் பெற்று வருகின்றது நிலையில் இன்று அகழ்வு  பனிக்காக மேலதிக அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்

இதுவரை குறித்த வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன மேலதிகமாக காணப்படும் 7 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இன்று இடம் பொறுகின்ற போதும் குறித்த மனித எச்சங்களின் கீழ் மேலும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுகின்றது.

இதுவரை அப்புறப்படுத்தப்பட்ட  மனித எச்சங்கள் குறித்த வளாகத்திலேயே சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு வரையப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது 
குறித்த மனித புதை குழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்காக உயர்மட் கலந்துரையாடல் ஓன்று இவ்வார இறுதிக்குள் ஏற்பாடு செய்யபப்படவு ள்ளது குறிப்பிடதக்கது.





மன்னாரில் தொடர்ச்சியாக மீட்க்கப்படும் மனித எச்சங்கள்..படங்கள் Reviewed by Author on August 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.