கிளிநொச்சியில் பரவலாக துண்டுபிரசுரங்கள் விநியோகம் -
கிளிநொச்சி மாவட்டத்தில் நுண்கடனால் பாதிக்கப்படுவது தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுபிரசுரங்கள் இன்றைய தினம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனமும், கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் மற்றும் சிவில் சமூக வலையமைப்பு ஆகியன இணைந்து குறித்த துண்டுபிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
“நுண்கடன் சுமைகளில் இருந்து விடுபடுவதற்கு அரசாங்கத்தினால் செய்யப்படுகின்ற ஏற்பாடுகள் பற்றிய அறிவித்தல்” எனும் தலைப்பின் கீழ் இந்த துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நுண்கடனால் ஏற்படும் பாதிப்புக்களிலில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன், கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் பேருந்து நிலையங்களில் குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகளால் இந்த துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதன்போது சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
75 பேருக்கு நுண்கடனிலிருந்து விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கின்றபோதிலும், அவை, எவ்வாறானவர்கள் என்பது தொடர்பில் அடையாளப்படுத்தப்படவில்லை.
குறிப்பிட்ட கால எல்லையில் பெறப்பட்ட கடன்களே இவ்வாறு இல்லாது செய்யப்பட்டதாகவும், கால எல்லையை இல்லாது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் பரவலாக துண்டுபிரசுரங்கள் விநியோகம் -
Reviewed by Author
on
August 11, 2018
Rating:

No comments:
Post a Comment