நீங்க ஸ்மார்ட்போன்னே கதின்னு இருக்கீங்களா?
அத்தகைய நவீன கண்டுபிடிப்புகளில் ஒன்றான ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால் நாம் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
- நீண்ட நேரம் மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சுக்கள் உடலில் பல பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த கதிர்வீச்சு மூளையின் செல்களை தூண்டி விடுவதால் மூளை விழிப்புடன் செயல்படும். இதனால் ஆழ்ந்த தூக்கம் வராது.
- இன்று அனைத்து இளைஞர்களும், இளம் பெண்களும் செல்போன்களை நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் காதுகளில் உள்ள செவித்திறன் பதிப்பு அடைவது மட்டுமல்லாமல் மூளைக்களில் கேன்சர் கட்டிகளை உருவாக்கவும் வழி செய்கிறது. எனவே செல்போன்களை வலது காதில் வைத்து பேசாமல் இடது காதில் வைத்து பேசுவது நல்லது.
- நீண்ட நேரம் செல்போன்களை பார்த்து கொண்டே இருப்பதால் அவை கண்ணிற்கு பெறும் பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி செய்வதால் நாம் கண்ணிமைக்கும் நேரம் குறைந்து கண்களில் கண் எரிச்சல், கண்களில் இருந்து நீர் கசிதல் போன்ற பிரச்சனைகளும் உண்டாகும்.
- கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிக அளவில் செல்போனை பயன்படுத்தினால் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
- மாணவர்கள் அதிக அளவு செல்போன்களை பயன்படுத்துவதினால் அவர்களுக்கு மனஅழுத்தம், ஆழ்ந்த தூக்கம் இன்மை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவர் என சில ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- செல்போன் அதிகமாக பயன்படுத்துவதால் சில பெண்கள் மிக சிறிய வயதிலே பூப்படைகின்றனர். இதற்கு காரணம் செல்போன்களில் உள்ள ஒளி காரணமாக உடலில் மெலடோனின் குறைபாடு உண்டாகி ஹார்மோன் சுழற்சியில் குழப்பம் ஏற்படுவதுதான்.
நீங்க ஸ்மார்ட்போன்னே கதின்னு இருக்கீங்களா?
Reviewed by Author
on
August 15, 2018
Rating:

No comments:
Post a Comment