தமிழக வீரர் அஸ்வினுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லிக்கு காயம் ஏற்பட்டதால், அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.
அப்படி அவர் விளையாட முடியவில்லை என்றால் துணைத் தலைவராக உள்ள ரஹானே தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் ரஹானேவை தலைவராக நியமிப்பதை பிசிசிஐ நிர்வாகம் விரும்பவில்லை எனவும் ரஹானே பார்மில் இருக்கிறாரா இல்லையா என்பது கூட புரியாத காரணத்தினால் இந்திய அணிக்கு ரஹானே தலைவனாகும் வாய்ப்பு மிகக் குறைவு என கூறப்படுகிறது.
அப்படி கோஹ்லி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றால், ரஹானேவை விட அஸ்வின் தான் தலைவராக நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அனுபவம் வாய்ந்தவர் மட்டுமல்லாமல், தமிழகம் உள்ளிட்ட பல அணிகளுக்கு ஏற்கெனவே தலைவராக இருந்தால், அவர் தலைவராகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வீரர் அஸ்வினுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
Reviewed by Author
on
August 15, 2018
Rating:
No comments:
Post a Comment