கட்டாருக்கு தொழிலுக்கு சென்ற 21 பேர் மரணம்! -
தொழில் நிமிர்த்தம் கட்டாருக்கு சென்றவர்களில் 21 பேர், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 19 பேரின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஏனைய இரண்டு பேரின் சடலம் இதுவரையில் கொண்டு வரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வெளிநாட்டுறவுகள் பிரிவின் அதிகாரி ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த இருவரின் சடலங்களும் நாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
கட்டாருக்கு தொழிலுக்கு சென்ற 21 பேர் மரணம்! -
Reviewed by Author
on
August 18, 2018
Rating:

No comments:
Post a Comment