ஸ்டாலினுடன் உரையாடிய ரணில்: கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார் -
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திராவிட முன்னேற்றக்கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் உரையாடி, கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை இந்தியாவில் வைத்து, மு.க.ஸ்டாலினுடன் உரையாடி, மருத்துவமனையில் உள்ள கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருப்பதி ஆலயத்தில் தரிசனம் மேற்கொள்வதற்காக இன்று இந்தியா சென்றுள்ளார். அவர் நாளை காலை திருப்பதி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
ஸ்டாலினுடன் உரையாடிய ரணில்: கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார் -
Reviewed by Author
on
August 03, 2018
Rating:

No comments:
Post a Comment