வாங்கிய சம்பளத்தை அப்படியே கொடுத்த சின்மயி
பிரபல பாடகி சின்மயி பல்வேறு படங்களுக்கு டப்பிங்கும் பேசுகிறார். சமந்தா உள்ளிட்ட பல ஹீரோயின்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசுவதும் சின்மயிதான்.
தற்போது கேரளாவில் வெள்ள நிவாரண பணிகளுக்காக பலரும் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிவரும் நிலையில் சின்மயி தான் தெலுங்கு படம் ஒன்றிற்கு டப்பிங் பேசுவதின் மூலம் கிடைக்கும் சம்பளத்தை அப்படியே கேரளாவுக்கு கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.இதனால் சின்மயிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலும் இது தனக்கு சென்னை வெள்ளத்தை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ள அவர், "மக்களுக்கு உதவ வந்த மீனவர்களுக்கு வெள்ளம் வடிந்த பிறகு படகை மீண்டும் அவர்கள் இடத்துக்கு கொண்டுசெல்ல யாரும் உதவவில்லை. தற்போதும் யாரும் திருந்தவே இல்லை, ஏரி குளங்களில் வீடுகள்/அடுக்குமாடி கட்டிக்கொண்டு தான் இருக்கின்றனர்" என சின்மயி பதிவிட்டுள்ளார்.
வாங்கிய சம்பளத்தை அப்படியே கொடுத்த சின்மயி
Reviewed by Author
on
August 17, 2018
Rating:

No comments:
Post a Comment