திமுக தலைவராக மு.க.ஸ்டாலின்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது.
இந்த பதவிக்கும், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இவர்கள் 2 பேரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சியின் பதிவேட்டில் கையெழுத்திடுகிறார்.
அதேபோல் பொருளாளராக பதவி ஏற்கும் துரைமுருகனும் கட்சியின் பதிவேட்டில் கையெழுத்திடுவார். இந்த கூட்டத்துக்கு பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
அதனைத்தொடர்ந்து தி.மு.க.வின் 2-வது தலைவராக பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றுகிறார்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
Reviewed by Author
on
August 28, 2018
Rating:
Reviewed by Author
on
August 28, 2018
Rating:


No comments:
Post a Comment