வவுனியா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நேர்ந்துள்ள நிலை -
வவுனியா மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1881 குடும்பங்களை சேர்ந்த 6830 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் இஸ்மாலெப்பை முகமட் ஹனீபா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் வறட்சி நிலை தொடர்பாக அவரிடம் இன்று வினவிய போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவில் வறட்சியான காலநிலை நிலவுகின்றது. இதன்படி வவுனியா பிரதேச செயலக பிரிவில் 294 குடும்பங்களும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 78 குடும்பங்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட செயலகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 6 லீற்றர் வீதம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு முதல் கட்டமாக 1.39 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நேர்ந்துள்ள நிலை -
Reviewed by Author
on
August 09, 2018
Rating:

No comments:
Post a Comment