முதல் தமிழ் படம்! மெர்சல் படத்திற்கு காத்திருக்கும் புதிய சவால்..
விஜய் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு மிக பிரம்மாண்டமாக வெளிவந்த படம் மெர்சல். இந்த படம் 200 கோடிக்கும் மேல் வியாபாரம் செய்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அடுத்து மெர்சல் படம் சீனாவில் வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட துவக்கத்தில் படம் அங்கு வெளியாகுமாம். சீனாவின் HGC என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தின் உரிமத்தைப் பெற்றுள்ளது. அது சீன மொழியில் டப் செய்யப்பட்டு தியேட்டர்களில்
உலகிலேயே மிகப்பெரிய சினிமா மார்க்கெட்டாக கருதப்படும் சீனாவில் அமீர்கானின் டங்கள் படம் மிக பிரம்மாண்ட வசூல் ஈட்டியது, அது போல மெர்சல் ஜெயிக்குமா என்பதை பொடுத்திருந்து தான் பார்க்கவேண்டும். பாகுபலி 2 படமே எதிர்பார்த்ததைவிட மிக சுமாரான வசூலை மட்டுமே அங்கு பெற்றது.
சீனாவில் வெளியாகும் முதல் தமிழ் படம் மெர்சல் தான். இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடிவருகின்றனர்.
முதல் தமிழ் படம்! மெர்சல் படத்திற்கு காத்திருக்கும் புதிய சவால்..
Reviewed by Author
on
August 11, 2018
Rating:

No comments:
Post a Comment