கல்லீரல் வீக்கம் குறையணுமா....
கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு இரண்டு காரணிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒன்று, குடிப் பழக்கம். இரண்டாவதாக, கொழுப்பு நிறைந்த உணவுகள்.
வாய் கசப்பு, ருசியின்மை போன்ற உணர்வு இருக்கும். வாயில் அதிகப்படியான நீர் உற்பத்தியாதல், பசியின்மை, உண்ட உணவு சரியாக செரிமானமின்மை, காலையில் எழுந்ததும் பித்தவாந்தி வருதல், முகப்பொலிவு குறைதல், முகம் வற்றிப்போய் எலும்புகள் தெரிதல், வயிறு மட்டும் பெருத்துப் போய், கை கால் மெலிந்து போகும். அடிக்கடி காய்ச்சல் வருதல் போன்ற பிரச்னைகள் கல்லீரல் நோய்க்கான அறிகுறிகளாகும்.
இதனை விரட்ட நம் முன்னோர்கள் கையாண்ட திரிபலா கஷாயம் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- கடுக்காய் தோல் - 100 கிராம்
- நெல்லி வற்றல் - 100 கிராம்
- தான்றிக்காய் தோல் - 100 கிராம்
செய்முறை
மேற்கண்ட பொருள்கள் எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி, வெயிலில் காய வைத்து, இடித்து பொடி செய்து மெல்லிய சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.அந்த பொடியில், இரண்டு ஸ்பூன் பொடி எடுத்து, 200 மில்லி தண்ணீரில் கலந்து, அதை அப்படியே அசையாமல் இரவு முழுக்க வைத்திருந்துவிட்டுங்கள்.
காலையில் அதை வடிகட்டி, அதில் கொஞ்சம் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
அதேபோல் மாலையிலும் குடிக்கலாம். இந்த மருந்தின் மூலம் காமாலை, ஈரல் நோய்கள் போன்றவை குணமாகும்.
கல்லீரல் வீக்கம் குறையணுமா....
Reviewed by Author
on
September 11, 2018
Rating:
Reviewed by Author
on
September 11, 2018
Rating:


No comments:
Post a Comment