கருஞ்சீரகம்....ஏராளமான அற்புத நன்மைகள்!
கருஞ்சீரகத்தில் உடலுக்குத் தேவையான பலவித அமிலங்களான மிரிஸ்டிக் அமிலம், பாமிட்ரிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், நுயிலிக் அமிலம், லினோயின் அமிலம், ஒமேகா 6 ஃபேட்டி அமிலம், ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன.
மேலும் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, தாமிரம், ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின் பி1, பி2, பி3 போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
மருத்துவ பலன்கள்
கணைய புற்றுநோய்
எந்தவித அறிகுறிகளையும் வெளிக்காட்டாமல் வரும் கணைய புற்றுநோயை குணப்படுத்த கருஞ்சீரகம் பெரிய அளவில் உதவுகிறது.பிராண சக்தி உடலில் குறைகின்ற போது ரத்தம், கணையம், குடல் என உறைந்திருக்கும் புற்றுநோய் செல்கள் பல மடங்கு பெருக ஆரம்பித்துவிடும். ஆனால், இந்த கருஞ்சீரகத்தை பயன்படுத்தும் போது பிராண சக்தியை தருவதுடன், எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

கருஞ்சீரகம் எலும்பு மஜ்ஜைகள் சீராக உற்பத்தியாகவும் இயங்கவும் உதவுகிறது. மேலும் உடலின் கொலஸ்ட்ராலின் அளவினை சமன் செய்வதற்கான உதவியையும் செய்கிறது.
கருஞ்சீரகம் சரியான இடைவெளியில் பசியை தூண்டிவிடும். அத்துடன் ஜீரண சக்தியையும் அதிகரிப்பதுடன் வயிற்றுப்போக்கையும் குணப்படுத்தும்.
கருஞ்சீரகம் வயிற்றில் இருக்கும் புழுக்களைக் கொல்லும் ஆற்றல் கொண்டது. வாந்தி, மயக்கம் போன்றவற்றையும் தீர்க்கும்.
தோல் வியாதிகள்
தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய கருஞ்சீரகத்தை தண்ணீர் விட்டு அரைத்து, அதனை நல்லெண்ணெயில் குழைத்து சொரி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வர குணமடையும். மேலும் தேமல் மேல் தடவி வர, தேமலும் மறையும்.
வயிற்றுப் பிரச்சனை
வயிற்றுப் பிரச்சனைகளை சரிசெய்ய, கருஞ்சீரகத்தை சில துளிகள் தேன்விட்டு அரைத்து வயிற்றில் தடவி வர வலிகள் தீரும். அதேபோல கருஞ்சீரகப் பொடியுடன் சிறிது மல்லிப்பொடியும் சேர்த்து பாலில் கலந்து குடித்து வர, அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.
வாய் பிரச்சனைகள்
வாய் துர்நாற்றம் வராமல் இருக்க கருஞ்சீரகத்தை வினிகரில் சிறிது கருஞ்சீரகத்தைப் போட்டு வேகவைத்து வாய் கொப்பளித்து வந்தால் குணமடையும். அத்துடன் வாய்துர்நாற்றமும் தீரும். கருஞ்சீரகத்தை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து வீக்கங்களில் தடவினால் வீக்கம் கரையும்.ஜலதோஷம்
கருஞ்சீரகத்தை அரைத்து பற்று போட தலைவலி குணமடையும். கருஞ்சீரகத்தின் விதைகளை பொடி செய்து, நல்லெண்ணெயில் ஊறவைத்து பிறகு மூக்கில் இரண்டு சொட்டுகள் வீதம் விட்டு வந்தால் கடுமையான ஜலதோஷம் தீரும்.
தலைமுடி
கருஞ்சீரகம் தலைமுடிக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே இதனை 4 தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, லேசாக வறுக்க வேண்டும். பின்னர் கால் லிட்டர் நல்லெண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ச்சி, அதில் இந்த பொடியைப் போட்டு காய்ச்ச வேண்டும்.பின் எண்ணெய் ஆறியதும் வடிகட்டி பாட்டிலில் சேமித்து வைத்து, தினமும் தலையில் தேய்த்து வர தலைமுடி கருகருவென வளர ஆரம்பிக்கும்.
கருஞ்சீரகம்....ஏராளமான அற்புத நன்மைகள்!
Reviewed by Author
on
September 12, 2018
Rating:
No comments:
Post a Comment