ஏழு தமிழர்கள் விடுதலையில் மீண்டும் முட்டுக்கட்டை: இறுதியில் நடப்பது இதுதான்! -
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ போன்ற முதன்மையான அமைப்பு விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில்,
மாநில அரசின் கோரிக்கை தொடர்பில் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் விரிவான பார்வையை ஆளுநர் தெரிந்து கொள்ள வேண்டும் என உள்விவகார அமைச்சு அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குற்றவியல் நடைமுறை தொகுப்பேட்டின் பிரிவு 435-ன் படி மத்திய விசாரணை அமைப்புகளால் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கின் மீது மாநில அரசு ஒரு முடிவெடுக்க வேண்டும் எனில், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது சட்ட விதியாகும்.
இதனால், ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் மத்திய அரசின் பார்வைக்கு மீண்டும் அனுப்பப்படும் எனவும், அதற்கு உரிய பதில் அளிக்க வேண்டியது மத்திய அரசே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கடந்த ஞாயிறு அன்று ஏழு பேர் விடுதலை தொடர்பில் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த முடிவை காங்கிரஸ் கட்சியை தவிர எஞ்சிய பெரும்பாலானா கட்சிகள் வரவேற்றுள்ளன.
இருப்பினும் ராஜீவ் கொலையின்போது மரணமடைந்த அப்பாவி மக்களின் உயிருக்கு மதிப்பில்லையா என்ற கேள்வியுடன், இந்த விவகாரம் நாட்டில் தவறான முன்னுதாரணம் என மாறிவிடும் நிலை உள்ளது என்ற குரலும் எழுந்துள்ளது.
ஏழு தமிழர்கள் விடுதலையில் மீண்டும் முட்டுக்கட்டை: இறுதியில் நடப்பது இதுதான்! -
Reviewed by Author
on
September 12, 2018
Rating:

No comments:
Post a Comment